இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்- வைகோ

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

Update: 2022-09-17 17:03 GMT

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தி பேசாத மாநிலங்களின் மீது சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் மூர்க்கத்தனமாகத் மத்திய அரசு திணித்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்திற்கு தலைமை வகித்த, உள்துறை அமைச்சர் அமித்ஷா, "உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசியுள்ளார். இந்தியைத் திணிக்கும் ஆர்வத்தோடு, இந்திய வரலாற்றின் ஆன்மாவை கற்றுக்கொள்ள அனைவரும் இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இந்தியை நம்மீது மீண்டும் திணிக்கும் அபாய எச்சரிக்கையாகவே அமித்ஷாவின் பேச்சை நாம் கவனிக்க வேண்டும். இதனை கண்டித்து தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன்.

24-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்