ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

ராதாபுரம் தொகுதியில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-27 20:57 GMT

திசையன்விளை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. ராதாபுரம் தொகுதியில் கையெழுத்து இயக்கத்தை திசையன்விளையில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரைமண்ட், மாவட்ட அவைத்தலைவர் சற்குணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்