ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல்; வேட்புமனு விண்ணப்பத்தை வைகோ பெற்றுக்கொண்டார்
ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று வைகோ வேட்புமனு விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார்.
சென்னை,
ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று வைகோ வேட்புமனு விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார். வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 1-ந்தேதி கடைசி நாள் என்றும், ஜூன் 14-ந்தேதி நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.