பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேயர் ஆய்வு
சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா நேற்று சத்துவாச்சாரி வேளாளர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டார். இந்த பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி இரவு, பகலாக மேற்கொண்டு விரைந்து முடித்து, சாலை அமைக்கவும் உத்தரவிட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆய்வின் போது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளர் பார்வதி, உதவி பொறியாளர்கள் ரமேஷ், செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.