புதிய கழிப்பறை கட்டிடங்களை மேயர் ஆய்வு
திண்டுக்கல்லில் புதிய கழிப்பறை கட்டிடங்களை மாநகராட்சி மேயர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பேகம்பூர் அடுத்துள்ள பூச்சிநாயக்கன்பட்டி மற்றும் சவேரியார்பாளையத்தில் ரூ.24.96 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன இந்த கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனை மேயர் இளமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கழிப்பறை கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், மின் இணைப்பு, தண்ணீர் வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கவுன்சிலர் ஹசீனா பர்வீன், உதவி என்ஜினீயர் சத்யா, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.