கல்வி மட்டுமே உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்தும் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கல்வி மட்டுமே உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்தும் என விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

Update: 2022-07-27 16:16 GMT

செய்யாறு

கல்வி மட்டுமே உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்தும் என விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் சிலை திறப்பு மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி தலைவர் மற்றும் தாளாளர் முத்துவேல் முத்துக்குமார், வனிதா முத்துகுமார், மாவட்ட கல்வி அலுவலர் நளினி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார், தாசில்தார் சுமதி, செயலாளர் வஜ்ஜிரவேல், பொருளாளர் ரவிபாலன், தனியார் தொலைக்காட்சி நெறியாளர் பாலவேல் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சங்கீதா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்து அப்துல் கலாம் விருதுகளை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:

மாணவர்களாகிய நீங்கள் என்ன படிக்கலாம் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். சிறுவயத்தில் பள்ளி கூடத்தில் நான் படிக்கும் போது நிலவில் விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் இறங்கினார். அவர் இறங்கிய அதே நிலவில் இன்று நீர் இருக்கிறது என இந்தியர் மூலம்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அதற்கான விதையை விதைத்தது கண்டிப்பாக கோதவாடி குக்கிராமத்தில் நான் பிறந்தாலும் எனக்கு கற்றுக்கொடுத்த பள்ளியும், எனது ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும், எனது தாய்மொழியும் எங்கெங்கும் என்னை உயரமாக இருக்க செய்தது. கல்வி உங்களை வாழ்வில் மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தும்

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்பு

நிகழ்ச்சியில் செய்யாறு விருட்சம் கல்வி அறக்கட்டளை இணை செயலாளர்கள் உதயகுமார், ஜெயப்பிரியா நாகராஜ், சுதாகர், ராஜலட்சுமி கந்தவேல், செயற்குழு உறுப்பினர்கள் லதா விஜயகுமார், கிரிஜா பெருமாள், லதா தண்டபாணி, கீதா ஜெயச்சந்திரன், கீதா சக்திவேல், கே.ராஜேஷ், எம்.அருள்பிரகாஷ், பார்த்தசாரதி, செல்வராஜா, அறக்கட்டளை உறுப்பினர்கள் பிரகாஷ், வடிவேல், மதிவாணன், ஸ்ரீதரன், மகேந்திரன், ரவிச்சந்திரன், குமரேசன், ஸ்ரீவித்யா, பன்னீர்செல்வம், ஜீவகன், கமலக்கண்ணன், ஜெயந்தி, சுகுமாரன், முகமது இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் ப்ரீத்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்