பேரையூரில் மே தின பொதுக்கூட்டம்
பேரையூரில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
பேரையூர்,
பேரையூரில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வக்கீல் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.