கணித்தமிழ் மாநாடு நிறைவு விழா: மாநாட்டு மலரை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் இன்று கணித்தமிழ் 24 மாநாடு நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2024-02-10 16:35 GMT

சென்னை,

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், இன்று நடைபெற்ற கணித்தமிழ் 24 மாநாடு நிறைவு விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழிணையம் 99 மாநாடு முதல் கணித்தமிழ் 24 மாநாடு வரை 25 ஆண்டுகளாகக் கணித்தமிழ் கடந்து வந்த பாதை, செல்லவேண்டிய தூரம் குறித்து பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான "கணித்தொகை" மாநாட்டு மலரை வெளியிட்டார்.

இவ்விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் சே.ரா.காந்தி, தமிழ் இணையக் கல்விக்கழக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆழி செந்தில்நாதன், முத்து நெடுமாறன், வெங்கடரங்கன், மணிவண்ணன், மதன் கார்க்கி, உலக நாடுகளின் மொழி அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்