பொதுமக்களுக்கு முககவசம்; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்

நெல்லை டவுனில் பொதுமக்களுக்கு முககவசத்தை, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-06-27 19:22 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. முககவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி பொதுமக்கள் முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நெல்லை டவுன் கீழரதவீதியில் நேற்று காலை நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கி, அனைவரும் முககவசம் அணிந்து கொரோனா பரவலை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 4 ரதவீதிகளிலும் பொதுமக்கள், வியாபாரிகள், கடை ஊழியர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், சந்திரசேகர், ரவீந்திரன், சுகாதார அலுவலர் முருகேசன், ஆய்வாளர் முருகன் மற்றும் டெங்கு ஒழிப்பு கள பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்