மருது சகோதரர்கள் நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

மருது சகோதரர்களின் 221ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-10-24 11:52 GMT

சிவகங்கை:

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இன்று மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்