மருதமலை வேல் கோட்ட தியானமண்டப ஆண்டு விழா

மருதமலை வேல் கோட்ட தியானமண்டப ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2022-11-01 18:45 GMT

மருதமலை

கோவை மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்ட தியான மண்டபம் உள்ளது.இங்கு முருகப்பெருமானின் வேல் பிரதானமாக வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்த தியான மண்டபத்தின் 15-ம் ஆண்டு நிறைவு பெற்று 16-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.இதை யொட்டி வேலுக்கு அதிகாலை 5.30 மணி அளவில் திருப்பள்ளியெழுச்சி, இதை தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, வள்ளி தெய்வானை உடன் அமர் வேல்கோட்ட வேலவனுக்கு கலச பூஜை வழிபாடு நடந்தது. தொடர்ந்து பதினெண் சித்தர்கள் முறைப்படி சித்தர் வேள்விபூசை நடைபெற்றது. இதை அடுத்து காலை 7.30 மணிக்கு திருமுறை விண்ணப்பம் ஓதப்பட்டது. பின்னர் மூலமூர்த்திக்கு வேள்விசாலையில் வைக்கப்பட்டிருந்த திருக்குடங்களில் உள்ள புனித நீர்மூலம் நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து பேரொளி வழிபாடு மற்றும் வேண்டுதல் விண்ணப்பம் வைக்கப்பட்டது. இதை அடுத்து பக்தர்கள் வேல்கோட்டவேலவனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு வேலுக்கு முருகப்பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பேரோளிவழிபாடு நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை வேல் கோட்ட அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் திருக்கோவில் நிறுவனர் திருச்சிற்றம்பலநாதன் குருநாத சுவாமிகள் செய்திருந்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்