செண்டிப்பூ அறுவடை பணிகள் மும்முரம்

செண்டிப்பூ அறுவடை பணிகள் மும்முரம்

Update: 2022-12-04 18:47 GMT

கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு தஞ்சை பகுதிகளில் செண்டிப்பூ அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

செண்டிப்பூ

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி, குருங்குளம், கும்பகோணம் பகுதிகளில் செண்டி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. செண்டிப்பூக்களுக்கு குறிப்பிட்ட சீசன் என்பது கிடையாது. இவை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் பூவாகும். நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 50- நாட்களுக்குள் பூக்கள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

இதனால் இந்த வகை பூக்களின் விலை அவ்வபோது ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படும். தற்போது கடும் பனிப்பொழிவு மற்றும் கார்த்திகை தீப திருநாள் வருவதையொட்டி செண்டி பூக்களுக்கு சந்தைகளில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் தஞ்சை பகுதிகளில் விவசாயிகள் செண்டி பூக்கள் அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விலை ஏற்றம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- பொதுவாக செண்டிப்பூ விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் பூ விலை வீழ்ச்சியை சந்திக்கும். இதனால் சாகுபடி செய்த செலவு தொகை கூட கிடைக்காத சூழல் ஏற்படும். ஆனால் தற்போது கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களின் விரத காலம் என்பதால் பூ விற்பனை அமோகமாக உள்ளது. அதற்கு மணி மகுடம் சூட்டுவது போல் கார்த்திகை தீப திருநாளும் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதன்காரணமாக செண்டிப்பூ அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். பூ சந்தையில் பூக்களின் தரத்தை பொறுத்று கிலோ ரூ.70 முதல் 100 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செண்டிப்பூ அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்