சமுதாய நலக்கூடம் கட்டித்தரக்கோரி ஆணையாளரிடம் மனு
காங்கயம் நகராட்சியின் 13-வது வார்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
காங்கயம் நகராட்சி, 13-வது வார்டு, பெரியார் நகரில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக இங்கு பொதுக்கழிப்பிடம் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். அதோடு எங்களது பகுதிக்கு ஒரு சமுதாயம் நலக்கூடம் கட்டித்தர கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஊர் பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து இந்த இரண்டு கட்டிடங்களும் கட்டிக்கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்கான இடத்தை தேர்வு செய்தும், அதற்கான அனுமதியும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.