திருவாரூரில் மாங்காய் விலை வீழ்ச்சி
சீசன் தொடங்கிவிட்ட நிலையில் திருவாரூரில் மாங்காய் விலை குறைந்து 1 கிலோ ரூ.25-க்கு விற்பனையானது.
சீசன் தொடங்கிவிட்ட நிலையில் திருவாரூரில் மாங்காய் விலை குறைந்து 1 கிலோ ரூ.25-க்கு விற்பனையானது.
ரூ.120-க்கு விற்பனை
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக திருச்சி, கும்பகோணம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும். சமையலுக்கு பயன்படும் முக்கியமான காய்கறிகளில் மாங்காயும் ஒன்று.
திருவாரூருக்கு திருச்சி, கும்பகோணம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாங்காய் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது. தொடா்ந்து விலை அதிகரித்து 1 கிலோ மாங்காய் ரூ.120-க்கு விற்பனையானது.
சீசன் தொடங்கியது
தற்போது மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இதனால் மாங்காய் விலை பெரும்பாலான மார்க்கெட்களில் விலைகுறைந்து உள்ளது. அதன்படி நேற்று திருவாரூரில் மாங்காய் விலை குறைந்து 1 கிலோ ரூ.25-க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.120-க்கு விற்பனையான முருங்கைக்காய் விலை குறைந்து நேற்று ரூ.25-க்கு விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், முருங்கைக்காயை பொருத்தவரையில் பனிப்பொழிவு, பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றால் விளைச்சல் பாதித்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, வரத்தும் அதிகரித்து உள்ளது. இதனால் ரூ.120-க்கு விற்பனையான முருங்கைக்காய் விலை குறைந்துள்ளது. மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இதனால் அதன் விலையும் குறைந்து விட்டது. இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிரித்தும், குறைந்தும் காணப்படுகிறது என்றனர்.