அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை

அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

Update: 2022-11-19 19:47 GMT

திருச்சியில் மேஜர் சரவணன் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் நேற்று 38-வது மண்டல பூஜை விழா தொடங்கியது. இதையொட்டி நேற்று அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் 27-ந்தேதி வரை நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு அபிஷேகமும், 7.30 மணிக்கு உஷத் பூஜை, சீவேலியும், 10.15 மணிக்கு கோமாதா பூஜையும், 10.30 மணிக்கு உச்சகால பூஜையும் நடைபெறும். காலை 11 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மீண்டும் மாலையில் 5 மணிக்கு நடைதிறக்கப்படும் 6 மணி முதல் 6.30 மணி வரை அய்யப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு மற்றும் கற்பூர ஆழியும், 6.30 மணி முதல் 7 மணி வரை மாலை பூஜை தீபாராதனையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை உபன்யாச நிகழ்ச்சியும், 9 மணி முதல் 9.40 மணி வரை ரதபவனி, ஹரிவாசனமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து நடை சாத்தப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்