அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை

சிவகாசியில் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

Update: 2022-07-01 20:08 GMT

சிவகாசி, 

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 15-ந்தேதி நடைபெற்றது. இதைதொடர்ந்து 48-வது நாளான நேற்று மண்டல பூஜை பூர்த்தி திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் மண்டல பூஜை பூர்த்தி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்