டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது

மானூர் அருகே டிராக்டரில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-22 19:50 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). விவசாயி. இவரது மகள் லலிதாவை, அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகவேல் மகன் முருகன் (30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாள் தனக்கு சொந்தமான டிராக்டரை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு குடும்பத்தினரோடு விவசாய வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்தபோது டிராக்டரில் புதிதாக பொருத்தப்பட்ட பேட்டரியை காணவில்லை. இதுகுறித்து பெருமாள் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது மருமகன் முருகன், டிராக்டரில் பொருத்தப்பட்ட பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்