கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-26 18:54 GMT

திண்டிவனம் தாலுகா சாரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவர் மீது ஒலக்கூர் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 20.8.2023 அன்று சாரம் பகுதியில் உள்ள ஓட்டலின் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக பெருமாளை ஒலக்கூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, பெருமாள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பெருமாளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார்.

இதையடுத்து பெருமாளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒலக்கூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்