படப்பை அருகே ஏரியில் ஆண் பிணம்
படப்பை அருகே ஏரியில் மிதந்த நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.;
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள ஆத்தனஞ்சேரி ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக நேற்று மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஏரியில் மூழ்கி இறந்த நபருக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஏரியில் மிதந்த நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் பிணமாக கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர். எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.