பராமரிப்பு பணி: ஜனவரி 1-ந் தேதி முதல் திருச்செந்தூர் செல்லும் ரெயில்கள் ரத்து..!!

ரெயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-30 17:16 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பல்வேறு ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அதில், செய்துங்கநல்லூர்- ஸ்ரீவைகுண்டம் ரெயில்நிலைய பகுதிகளில் தண்டவாளம் மிகவும் சேதம் அடைந்ததால் நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிகள் நாளை வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையங்கள் இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத 8 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் வாஞ்சி மணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய இரு சிறப்பு முன்பதிவு இல்லாத ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரெயில் (1 6731/16732) மற்றும் சென்னை – திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 20605/20606) ஆகியவை ஜன.1-ந் தேதி முதல் ஜன.5-ந் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்