கோமுகி அணையில் பராமரிப்பு பணி தீவிரம்

கோமுகி அணையில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-27 18:45 GMT

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். இருப்பினும் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி நிரம்பியதும் அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த அணையின் மூலம் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 44 அடியை எட்டியது. இதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதைதொடர்ந்து கோமுகி அணையை பராமரிக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பழைய மற்றும் புதிய பாசன ஷட்டர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அணையில் வளர்ந்து இருக்கும் முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்ததோடு, தடுப்பு சுவரில் வர்ணம் பூசும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்