கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-09 19:07 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, கியாஸ் சிலிண்டருடன் அரியலூரில் திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, அத்தியாவசிய தேவையான கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பொருளாதார இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது கியாஸ் விலை உயர்வால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, கியாஸ் விலை உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் உடனடியாக கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தபட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்