வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா
திருச்சுழி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா 16-ந் ேததி தொடங்குகிறது.
திருச்சுழி,
திருச்சுழி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா 16-ந் ேததி தொடங்குகிறது.
மகா சிவராத்திரி திருவிழா
திருச்சுழி வட்டம் வீரக்குடி கிராமத்தில் முருகைய்யனார் என்ற கரைமேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி உற்சவ திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா 22-ந் தேதி வரை நடக்கிறது.
16-ந் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா ெதாடங்குகிறது. 17-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
சந்தன காப்பு அலங்காரம்
18-ந் ேததி மகா சிவராத்திரியையொட்டி மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கணபதி ஹோமம், இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ருத்ரா அபிஷேகம், 12 மணி முதல் 1.30 மணி வரை சங்காபிஷேகம், 3.30 மணி முதல் 4 மணி வரை பச்சை வாழை பரப்புதல் நிகழ்ச்சி, அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை வள்ளி, தெய்வானை, கரைமேல் முருகன் சர்வ அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
19-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பு அபிேஷகம், 10.30 மணி முதல் 12 மணி வரை பொங்கல் வைத்தல், இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை சுவாமி வீதி உலா வருதல், சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது.
அர்த்த சாம பூஜை
20-ந் தேதி பகலில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகமும், இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை உற்சவர் திருஉலாவும், 21-ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை பால் பொங்கல் வைத்தல், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 10 மணிக்கு வில்லூர் எண்ணெய் காப்பு எடுக்கும் நிகழ்ச்சி, வள்ளி திருமண நாடகம், இரவு 11 மணி முதல் 12 மணி வரை எண்ணெய் காப்பு அலங்காரம், நள்ளிரவு 1.30 மணி முதல் 3 மணி வரை அர்த்த சாம பூஜை நடக்கிறது. 22-ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அபிஷேகம் செய்து உற்சவருக்கு தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு விசேஷ அபிஷேகமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.