மகா சிவராத்திரி வழிபாடு:கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மகா சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-18 18:45 GMT


மகா சிவராத்திரி

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் மகா சிவராத்திரியைெயாட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் அம்மன் சிவன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள காசிவிசுவநாதர் சன்னதியிலும் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் நான்கு கால பூஜைகள் நடைபெற்று சிவ பெருமான் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி, வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிச்சாங்கரை கீழ சொக்கநாதர், மேலசொக்கநாதர் கோவில் ஆகிய கோவில்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு வழிபாடு

பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, சிவன், நந்திகேஸ்வரர், மகாலட்சுமிக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரியகுளம் அருகே உள்ள மலை மேல் கைலாசநாதர் கோவிலில் கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்