மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும்

மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-16 20:02 GMT

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கு தினசரி அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்திற்கு நிறுத்தம் கொடுக்கப்படவில்லை. பின்னர், பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் நேற்று வரை தற்காலிகமாக ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து, மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343/16344) இன்று (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரு மார்க்கங்களிலும் ஒட்டன்சத்திரத்தில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயில் மதுரையில் இருந்து செல்லும் போது, மாலை 5.30 மணிக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் போது காலை 7.50 மணிக்கும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து புறப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்