மதுரையில், வருகிற 23-ந் தேதி மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு- சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு வருகிற 23-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதில், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Update: 2023-07-20 21:05 GMT


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு வருகிற 23-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதில், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு

மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு மதுரையில் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்தும் தலைவர்கள் பேசுகிறார்கள்.

ஓபுளா படித்துறை பகுதியில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தலைமை தாங்குகிறார்.

சீதாராம் யெச்சூரி

அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீ்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் பேசுகின்றனர். முடிவில், தெற்கு பகுதிக்குழு செயலாளர் லெனின் நன்றி கூறுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்