மணல் கடத்தல் வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மணல் கடத்தல் வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தியதாக சின்னதம்பி என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி, மனுதாரர் இதுபோன்ற குற்றங்களில் இனி ஈடுபட மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சட்ட புத்தகங்கள் வாங்க ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.