மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு

தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.;

Update:2023-07-13 17:45 IST

மதுரை,

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான 63 பேரை கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்து, அது தொடர்பான விவரங்களை கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி வெளியிட்டது. இதனிடையே தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூலை 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்