தூத்துக்குடி பொதுமக்களுக்கு மதுரை அ.தி.மு.க. மாநாட்டு அழைப்பிதழ்:எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்

தூத்துக்குடி பொதுமக்களுக்கு மதுரை அ.தி.மு.க. மாநாட்டு அழைப்பிதழை எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்

Update: 2023-08-18 18:45 GMT

மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க வருமாறு பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார்.

அழைப்பு

அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், நேரடியாக பொதுமக்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், வக்கீல் சுகந்தன்ஆதித்தன், திருச்செந்தூர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1,500 வாகனங்களில் பயணம்

பின்னர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கூறுகையில், மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து 1,500 வாகனங்களில் செல்கிறோம். தொண்டர்கள் எழுச்சியோடு மாநாட்டுக்கு வர தயாராக இருக்கின்றனர். அடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்த மாநாட்டை சீர் குலைக்கும் விதமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க.வினர் நீட் தேர்வு எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். அந்த கட்சியினர் தமிழக மக்கள், பெற்றோர், மாணவர்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள் மீது அக்கறை இருந்தால் தி.மு.க. அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்