கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்ததில் தீக்காயமடைந்த பணியாளர் சாவு

கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்ததில் தீக்காயமடைந்த பணியாளர் உயிரிழந்தாா்.

Update: 2022-10-03 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 48). அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு கள பணியாளராக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று, இவர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதில் தீக்காயமடைந்த கோவிந்தன், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்