மின்கம்பத்தில் மோதி பெட்டிக்கடையின் கூரை மீது ஏறிய சொகுசு கார் - ராமநாதபுரத்தில் பரபரப்பு

சொகுசு கார் சாலையோரம் இருந்த பெட்டிக்கடையின் மீது ஏறி மேலே இருக்கும் மின்கம்பியில் அந்தரத்தில் தொங்கிய காட்சி காண்போரை அச்சமடையச் செய்தது.;

Update: 2023-04-30 11:59 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருகை தருகின்றனர். அந்த வகையில் கேரள நம்பர் கொண்ட சொகுசு கார் ஒன்று ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது வாலாந்தரவை அருகே விபத்திற்குள்ளானது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி அதே வேகத்தில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடையின் மீது ஏறி, மேலே இருக்கும் மின்கம்பியில் அந்தரத்தில் தொங்கிய காட்சி காண்போரை அச்சமடையச் செய்தது.

காரில் 2 நபர்கள் இருந்ததாகவும், கார் விபத்திற்குள்ளான போது இருவரும் கீழே இறங்கி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்