லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருக்காட்டுப்பள்ளியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் சாலையில் உள்ள கடையில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு ஒன்பத்துவேலியை சேர்ந்த நந்தகுமார்(வயது40) வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை துண்டு சீட்டில் எழுதி கொடுத்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் நந்தகுமாரிடம் இருந்து ரூ.500 மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.