லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-15 18:34 GMT

அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் வயலோகம் கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பகுருதீன்அலி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்