தொழிலில் நஷ்டம்; வியாபாரி தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-08 18:45 GMT

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அறந்தாங்கியை சேர்ந்தவர் கார்த்தி என்கிற கார்த்திராஜா (வயது 40). இவர் பூர்த்தங்குடி பகுதியில் கட்டிட பொருளகம் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது கடையில் கடனுக்கு பலர் பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பொருட்களுக்கான பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் கார்த்திக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமை அதிகரித்தது. மேலும் கடன் பிரச்சினையால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதனால் மனமுடைந்த கார்த்தி, விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்