லாரி மோதி வாலிபர் சாவு
அம்மாப்பேட்டை அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.
அம்மாப்பேட்டை;
அம்மாப்பேட்டை அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்றனர்
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே திருநாயிருப்பு கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 26) டிரைவர். இவரது நண்பர் குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கதிரவன் (23). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் நள்ளிரவு 12.30 மணியளவில் தஞ்சையில் இருந்து புத்தூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் மோட்டார் சைக்கிளை ஹரிஹரன் ஓட்டி சென்றார். கதிரவன் பின்னால் அமர்ந்து இருந்தார்.
லாரி மோதியது
தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் பல்லவராயன் பேட்டை, புத்தூர் பிரிவு சாலையில் இவர்கள் சென்ற போது புத்தூர் நோக்கி திரும்பும்போது எதிரே வந்த லாரி ஹரிஹரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் படுகாயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் கதிரவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாப்பேட்டை போலீசார் ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.