சங்ககிரி:-
சங்ககிரி அருகே தாமஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 32), லாரி டிரைவர். இவருக்கு நித்யா என்ற மனைவியும், கிஷோர் (11) என்ற மகனும் வைஷ்ணவி (3) என்ற மகளும் உள்ளனர். கவுதம்ராஜ் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததாகவும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நித்யா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்து கொண்டு திருச்செங்கோடு பகுதி உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கவுதம்ராஜ், நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.