பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தளவாபாளையம் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). இவரது மனைவி சாவித்திரி (53). அதே பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (43). லாரி டிரைவரான இவர் அந்த வழியாக செல்லும் சாக்கடையை அடிக்கடி அடைத்து வைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனால் ராமச்சந்திரன் எதற்காக அடிக்கடி சாக்கடையை அடைத்து வைக்கிறாய் என்று கண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது கண்ணன் அங்கு நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனின் மனைவி சாவித்திரியை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாவித்திரி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து, கண்ணனை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.