கபிஸ்தலம் அருகேகருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
கபிஸ்தலம் அருகே கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கபிஸ்தலம் அருகே கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கருங்கல் ஏற்றி வந்த லாரி
பெரம்பலூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு நேற்று அதிகாலை கருங்கல் பாறைக்கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதிஅக்ரஹாரம் மெயின் ரோட்டில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் இருந்த சேற்றில் சிக்கி கொண்டது. இதையடுத்து லாரி டிரைவர் உடனடியாக லாரியில் இருந்து இறங்கி உள்ளார். அவர் இறங்கிய சிறிது நேரத்தில் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த கருங்கல் அனைத்தும் கீழே கொட்டியது.
டிரைவர் உயிர் தப்பினார்
சேற்றில் லாரி சிக்கியதும் அதில் இருந்து டிரைவர் உடனடியாக இறங்கியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பள்ளத்தில் கவிழ்ந்த லாரி நேற்று காலை 11 மணி அளவில் 2 கிரேன்கள் மூலம் மீட்கப்பட்டது. இந்த மீட்பு பணிகள் காரணமாக கும்பகோணம்- திருவையாறு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.