ஓசூர் அருகே மாங்காய் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது

Update: 2023-05-25 18:45 GMT

ஓசூர், மே.26-

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 12 டன் மாங்காய்களை ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி கிருஷ்ணகிரியில் உள்ள மாங்கூழ் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சென்றது. இந்த லாரி ஓசூர் அருகே காந்திநகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, முன்னால் காப்பர் கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதில் மினி லாரியின் இடதுபுறம் சேதமடைந்த நிலையில், அதில் இருந்த மாங்காய்கள் சாலையில் கொட்டி சிதறின. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சிதறி கிடந்த மாங்காய்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் அங்கு சென்று, லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். 

மேலும் செய்திகள்