நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

Update: 2024-04-19 00:36 GMT
Live Updates - Page 5
2024-04-19 02:17 GMT

தென் சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் , சாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 


2024-04-19 02:05 GMT



2024-04-19 01:48 GMT

அனைவரும் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி

2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது- பிரதமர் மோடி 

2024-04-19 01:38 GMT

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று தேர்தல்

தமிழ்நாடு, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான்-நிகோபார், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எனவே மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் களமிறங்கி இருக்கும் 133 வேட்பாளர்களின் எதிர்காலத்தை 8.92 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதற்காக 2,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

2024-04-19 01:34 GMT

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சம் பேர் ஜனநாயக கடமை ஆற்ற உள்ளனர்.

2024-04-19 01:32 GMT

அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று தொடங்கியது

2024-04-19 01:19 GMT

வாக்களிக்க முதல் நபராக வந்த அஜித்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய முதல் நபராக நடிகர் அஜித் குமார் வருகை தந்தார். திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், 6.45 மணியளவிலே அஜித் வருகை தந்தார்.

2024-04-19 00:43 GMT

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 950 பேரும், புதுச்சேரி தொகுதியில் 26 பேரும் களத்தில் இருக்கின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை வடசென்னையில்35 பேரும், மத்திய சென்னையில் 31 பேரும், தென்சென்னையில் 41 பேரும் களம் காண்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் மட்டும் 48 லட்சத்து 69 ஆயிரத்து 518 வாக்காளர்கள் இருக்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டுபோட வசதியாக, தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

2024-04-19 00:42 GMT

 மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் பதவிக்காலம் ஜூன் மாதம் 16-ந்தேதி நிறைவடைகிறது. அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறும்.

2024-04-19 00:41 GMT

மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், மாதிரி வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்க்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்