தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், அரசியல் கட்சியை... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 950 பேரும், புதுச்சேரி தொகுதியில் 26 பேரும் களத்தில் இருக்கின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை வடசென்னையில்35 பேரும், மத்திய சென்னையில் 31 பேரும், தென்சென்னையில் 41 பேரும் களம் காண்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் மட்டும் 48 லட்சத்து 69 ஆயிரத்து 518 வாக்காளர்கள் இருக்கின்றனர். வாக்காளர்கள் ஓட்டுபோட வசதியாக, தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-04-19 00:43 GMT

Linked news