அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்

வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-18 07:59 GMT

சென்னை,

வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வானிலை மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி நேற்று கரையை கடந்தது.

இந்த நிலையில், அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதைபோல மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழ்நாட்டிற்கு பெரிய மழைக்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வப்போது கனமழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்