நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

Update: 2024-11-22 09:50 GMT

நெல்லை,

அதிமுகவில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு' ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.

இக்குழுவில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கடந்த 11-ம் தேதி இக்குழு கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை, கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகளிடையே மோதல் வெடித்தது. நெல்லையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன் மாவட்ட செயலாளர் கணேச ராஜா தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள், மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் எஸ்.பி. வேலுமணி பேசுகையில்,

நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை மறந்துவிட்டு நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை வீழ்த்த ஆட்கள் இல்லை. உரிமைகளை மீட்டெடுத்த இயக்கமான அதிமுகவில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருப்போம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்