குறுந்தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் தொடங்க மானியத்துடன் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-25 17:56 GMT

குறுந்தொழில் தொடங்க...

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் (பி.எம்.எப்.எம்.ஈ.) திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைபாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் தயாரித்தல், காப்பி கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப் பொரி வகைகள், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்துதல் செய்தும் பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம்.

மானியத்துடன் கடன்உதவி

ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்கிட இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை. திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காகச் செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். அரசு மானியம் 35 சதவீதம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவிக் குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 89255 33976, 89255 33978 என்ற செல்பேசி வழியாகவோ அணுகி பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்