477 பயனாளிகளுக்கு ரூ.9.50 கோடி மானியத்துடன் கடன் உதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 477 பயனாளிகளுக்கு ரூ.9.50 கோடி மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் கூறினார்.

Update: 2023-04-14 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 477 பயனாளிகளுக்கு ரூ.9.50 கோடி மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் கூறினார்.

கடன் உதவி

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 19 ஆயிரத்து 234 அரசு மானியத்துடன் கூடிய ரூ.2 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரத்து 747 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 7 ஆயிரத்து 893 அரசு மானியத்துடன் கூடிய ரூ.80 லட்சத்து 56 ஆயிரத்து 590 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

நிலம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.5 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் ஒரு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கடன் உதவியும் என மொத்தம் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.89 லட்சத்து 27 ஆயிரத்து 127 அரசு மானியத்துடன் ரூ.3 கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 337 கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.9.50 கோடி

கடந்த 2022-2023-ம் ஆண்டில் 1.4.2022 முதல் 31.3.2023 வரையிலான கால கட்டத்தில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 279 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 65 லட்சத்து 32 ஆயிரத்து 617 அரசு மானியத்துடன் ரூ.22 கோடியே 27 லட்சத்து 53 ஆயிரத்து 723 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 140 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 82 லட்சத்து 5 ஆயிரத்து 122 அரசு மானியத்துடன் ரூ.10 கோடியே 95 லட்சத்து 76 ஆயிரத்து 38 கடன் உதவியும், நிலம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.91 ஆயிரத்து 770 அரசு மானியத்துடன் ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 900 கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் அரசு மானியத்துடன் ரூ.25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 427 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.8 கோடியே 60 லட்சத்து 99 ஆயிரத்து 509 அரசு மானியத்துடன் ரூ.33கோடியே 51 லட்சத்து 75 ஆயிரத்து 661 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் கடந்த 2 ஆண்டுகளில் 477 பயனாளிகளுக்கு ரூ.9.50 கோடி அரசு மானியத்துடன் ரூ.36.85 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்