ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி
சுரண்டையில் ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி- சமூக வலைதளங்களில் பரவும் காட்சியால் பரபரப்பு
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கட்டிட தொழிலாளர்கள் சிலர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் குழம்புடன் 15 சாப்பாடு பார்சல்கள் வாங்கினார்கள். அதில் ஒரு பார்சலில் இருந்த சிக்கன் குழம்பை எடுத்து சாப்பாட்டில் ஊற்றியபோது இறந்த நிலையில் பல்லி வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சாப்பாடு, சிக்கன் குழம்புடன் பல்லி கிடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.