#லைவ் அப்டேட்ஸ் செஸ் ஒலிம்பியாட்: வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், செஸ் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு. செஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் கலைக்குழு - 4 பேருக்கு கொரோனா
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
செஸ் போட்டி நடுவர்கள் ஆலோசனை...!
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமை நடுவர் லாரண்ட் பிரேய்ட், துணை தலைமை நடுவர் கோபகுமார் சுதாகரன் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.