ஊட்டி நூலகத்தில் நாளை மறுநாள் இலக்கிய திருவிழா

ஊட்டி நூலகத்தில் நாளை மறுநாள் இலக்கிய திருவிழா நடக்கிறது.

Update: 2023-10-03 19:00 GMT

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், நீலகிரியில் ஒரு பொது வாசிப்பு அறையை கொண்டு வரும் நோக்கத்தில் 1859-ம் ஆண்டு ஊட்டியில் நூலகம் கொண்டு வரப்பட்டது. நூற்றாண்டை கடந்த இந்த நூலகத்தின் தலைவராக மாவட்ட கலெக்டர் உள்ளார். இந்தநிலையில் ஊட்டி நூலகத்தில் 7-வது இலக்கிய திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), 7-ந் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் நடிகர்களும், எழுத்தாளர்களுமான அமீர்கான், கல்கி கோச்லின் மற்றும் எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், எழுத்தாளர் சுதா மூர்த்தி உள்பட பல்வேறு பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். இதேபோல் ஜெர்ரி பின்டோ, கல்கி கோச்லின், டாக்டர் மகேஷ் ரங்கராஜன், மன்சூர் கான், சுதா மூர்த்தி போன்ற புகழ்பெற்ற பேச்சாளர்களின் உரையாடல்கள், பேச்சுகள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகிறது. விழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பால் பெர்னாண்டஸ் ஊட்டியின் பழைய ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார். மாணவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில், பிரபல எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆடல், பாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்