ராமநத்தம் அருகேலாரி டியூப்களில் சாராயம் கடத்தியவர் கைது
ராமநத்தம் அருகே லாரி டியூப்களில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டனா்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி பகுதியில் நேற்று அதிகாலை ராமநத்தம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், கலியமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொ.குடிக்காடு கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சென்றவரை, தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் வேகமாக சென்றார். இதையடுத்து அவரை துரத்தி சென்று, மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமசேஷாபுரத்தை சேர்ந்த கேசவன் மகன் அருள் (வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் அவர் 4 லாரி டியூப்பில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருளை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.