பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
கம்பத்தில், பெட்டிக்கடையில் மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கம்பம் புது பஸ்நிலையம் அருகே, பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது முகமது பிலால் (வயது 38), என்பவர் தனது பெட்டிக்கடையில் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக்கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.